மீண்டும் ஹமாஸ் தலைவரானார் காலித் மிஷ்அல்

அரபுலக புரட்சிக்கு பிந்தைய மேற்காசியாவின் புதிய சூழலில் அமைப்பின் பொது முகமான காலித் மிஷ்அலையே மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்க ஹமாஸ் தலைவர்கள் தீர்மானித்தனர். காஸ்ஸா, மேற்கு கரை, இஸ்ரேல் ஆகிய இடங்களைச் சார்ந்த பிரதிநிதிகளும், வெளிநாடுகளில் வசிக்கும் தலைவர்களும் அடங்கிய 80 உறுப்பினர்கள் ஷூரா கவுன்சிலில் இடம்பெற்றுள்ளனர்.