2015-இல் குஜராத்தை ஹிந்து மாநிலமாக அறிவிப்போம்: VHP

வரும் 2015-ல் குஜராத்தை ஹிந்து மாநிலமாக அறிவிப்போம் என ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான வி.ஹெச்.பியின் சர்வதேச பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியா கூறியுள்ளார்.

அஹ்மதாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை வி.எச்.பி. சார்பில் நடத்தப்பட்ட ஹிந்து சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற தொகாடியா கூறியது:

வரும் 2015-க்குள் குஜராத்தில் உள்ள 18,000 கிராமங்களிலும் வி.எச்.பி. கிளைகள் தொடங்கப்பட்டு அதன்பின் ஹிந்து மாநிலமாக அறிவிப்போம். ஹிந்துக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் வகையில் உண்மையான ஹிந்துக்களாக மாற வேண்டும்.

ஹிந்துக்களின் செயல்பாடு, விழிப்புணர்வால்தான் நமது கனவான அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்ட முடியும்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய ஹிந்துத்துவா தீவிரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக கருதப்படும் ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய தலைவர் மோகன் பாகவத் தனது உரையில், அயோத்தியில் விரைவில் பிரம்மாண்டமான ராமர் கோயிலைக் கட்ட வேண்டும். பாரதத்தில் நேர்மையான, உண்மையான ஹிந்துக்களை உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Related

முக்கியமானவை 8145877991725475383

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item