போலி வழக்கில் சிக்கியவர்களுக்காக புதிய அமைப்பை துவக்கினார் கட்ஜு

இந்தியாவில் போலி வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டு அநீதிக்கு ஆளாக்கப்படும் அப்பாவிகளுக்கு உதவுவதற்காக ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் சேர்மனும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு புதிய அமைப்பை துவக்கியுள்ளார்.

போலி வழக்குகளில் கைதானவர்களின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களின் உண்மை நிலையை பரிசோதித்தல், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக குடியரசு தலைவர், ஆளுநர் ஆகியோருக்கு மன்னிப்பு வழங்க கோரி விண்ணப்பித்தல் போன்றவற்றை இவ்வமைப்பு மேற்கொள்ளும் என்று கட்ஜு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

‘The Court of Last Resort’ என்று பெயரிடப்பட்டுள்ள அமைப்பில் பிரபல திரைப்பட இயக்குநர் மகேஷ் பட், வழக்கறிஞர் மஜீத் மேமன் ஆகிய பிரபலங்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தியாவில் எங்கு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தாலும் உண்மையான குற்றவாளிகளை கைதுச் செய்வதற்கு பதிலாக சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த இளைஞர்களை போலீஸ் குறிவைக்கிறது.அதிகாரிகள் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக ஓரவஞ்சனையுடன் செயல்படுவதன் மூலம் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த ஏராளமான இளைஞர்கள் விசாரணை கூட இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று கட்ஜு கூறினார்.

Related

முக்கியமானவை 5586406961536636008

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item