அரசு அலுவலகத்தில் பாக்.கொடி: 6 ஹிந்துத்துவா தீவிரவாதிகள் கை
http://koothanallurmuslims.blogspot.com/2012/01/6.html
கர்நாடகா மாநிலம் சிந்தகியில் அரசு அலுவலகத்தின் முன்னால் உள்ள கொடி மரத்தில் பாகிஸ்தான் கொடியை ஏற்றியது தொடர்பாக ஆறு ஹிந்துத்துவா தீவிரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஸ்ரீராமசேனா ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கத்தின் மாணவர் பிரிவை சார்ந்தவர்கள் ஆவர். பிஜாப்பூர் மாவட்ட தலைநகரில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள சிந்தகி நகரத்தில் உள்ள தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள மினி விதானசவுதா என்று அழைக்கப்படும் வளாகத்தில் புதுவருட தினத்தில் பாக்.கொடி ஏற்றப்பட்டிருந்தது. இச்சம்பவத்தை தொடர்ந்து ஹிந்துத்துவா அமைப்புகள் கண்டனம் தெரிவித்து களமிறங்கின.
பாகிஸ்தான் கொடியை ஏற்றியதன் பின்னணியில் முஸ்லிம்கள் தாம் என குற்றம் சாட்டி கபட வேடதாரிகளான ஹிந்துத்துவா அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மேலும் பாக்.கொடி ஏற்றியதை கண்டித்து அப்பகுதியில் வி.ஹெச்.பி, பஜ்ரங்தள் உள்ளிட்ட ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் முழு அடைப்பையும் நடத்தின. இச்சம்பவத்தின் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயன்ற பா.ஜ.க, கொடி ஏற்றப்பட்ட இடத்தை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சிகளையும் நடத்தியது.
பிஜாப்பூர் நகரத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பும் இதைப் போன்றதொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால், குற்றவாளிகள் மீது போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஊர்மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.