ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவை இஸ்ரேல் வலியுறுத்தல்

ஈரானின் அணு உற்பத்தி நிலையங்களை குறி வைத்து, தாக்குதல் நடத்தி அழிக்கப் போவதாக இஸ்ரேல் திடீரென அறிவித்தது. இதனால், அமெரிக்கா உட்பட உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. ஈரான் தொடர்ந்து அணுஆயுதங்களை தயாரித்து குவித்து வருவதாக அமெரிக்கா உட்பட மேற் கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஈரான் மீது பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டன. ஆனால், ஆக்கப்பூர்வ பயன்பாட்டுக்காக மட்டுமே அணுசக்தி உற்பத்தி செய்யப்படுவதாக ஈரான் தொடர்ந்து கூறி வந்தது. இந்த நிலையில், சமீப காலமாக அண்டை நாடுகளான இஸ்ரேல் & ஈரான் இடையே மோதல் வெடித்துள்ளது.

அணு உற்பத்தியை உடனடியாக நிறுத்த தவறினால் ஈரான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று அமெரிக்காவை இஸ்ரேல் வலியுறுத்தியது. இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அதில் மீண்டும் வெற்றி பெற அமெரிக்க வாழ் இஸ்ரேலியர் களின் ஆதரவு தேவைப் படும் நிலையில், அதிபர் ஒபாமாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இதற்கிடையே, ஈரானின் அணு உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதலை தொடங்க அமெரிக்காவுக்கு 12 மணி நேர கெடுவை இஸ்ரேல் நேற்று விடுத்தது. அது தவறும் பட்சத்தில் தன்னிச்சையாக தாக்குதல் நடத்தப் போவதாகவும் எச்சரித்துள்ளது. அமெரிக்க முப்படை இணை தலைவரான ஜெனரல் மார்ட்டினிடம் இஸ்ரேல் ராணுவ அமைச் சர் எகுத் பாரக் இதை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், அமெரிக்கா அதிர்ச்சி அடைந்துள்ளது. 60 ஆண்டு கால நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேல், தன்னிச்சையாக ஈரான் மீது தாக்குதல் நடத்த எச்சரிக்கை விடுத்துள்ளதால் அதிபர் ஒபாமா அதிர்ச்சி அடைந்ததாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related

Isreal 6734668376318371183

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item