முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்திற்கு மாபெரும் வெற்றி

பண்டைய நாகரீகத்தின் தொட்டில்களில் ஒன்று எகிப்து. நைல் நதி, நாகரீகம் தோன்றி வளர்ந்த பூமி. அரபுகளின் வரலாற்றிலும், நபிமார்களின் வரலாற்றிலும் எகிப்துக்கு தனி இடம் உண்டு.

எகிப்தில் 40 ஆண்டு காலத்திற்கும் மேலாக சர்வாதிகார ஆட்சி செய்த ஹோஸ்னி முபாரக்கை மக்கள் புரட்சி வீழ்த்தியது. அரபு வசந்தத்தின் மல்லிகைக் காற்று அங்கு வீசத் தொடங்கியது.

அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் ஏஜெண்டாக செயல்பட்டு எகிப்து மக்களின் தன்மானத்தையும், அரபுகளின் வீரத்தையும் அடமானம் வைத்த துரோகியை வீழ்த்திய எகிப்து மக்கள் ஜனநாயக வழியில் தேர்தலை சந்தித்தனர்.

எகிப்தில்  நெறிசார்ந்த கொள்கைகளுக்காகவும், ஜனநாயகத்திற்காகவும் நீண்ட காலம் போராடிய மக்கள் செல்வாக்கு பெற்ற இக்வானுல் முஸ்லிமீன் (முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம்) அமைப்பின் அரசியல் பிரிவான விடுதலை மற்றும் நீதிக்கட்சி (FJP) தேர்தலில் பங்கேற்றது.

எகிப்து புரட்சியை வழிநடத்தியதில் இவ்வியக் கத்திற்கு முக்கியப் பங்குண்டு. தேர்தல் பிரச்சாரத்தில் இக்கட்சிக்கு மக்களிடையே செல்வாக்கு அதிகரித்ததைத் தொடர்ந்து அமெரிக்கா தனது நிலைபாட்டை மாற்றும் அளவுக்கு குலைநடுங்கியது. இக்வானுல் முஸ்லி மீன் இயக்கத்துடனான தனது அணுகுமுறையை மாற்றியது.

பல கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் முடிவில் இக்வானுல் முஸ்லிமீன் அரசியல் பிரிவான விடுதலை மற்றும் நீதிக்கட்சி மொத்தமுள்ள 498 இடங்களில் 235 இடங்களை வென்று சாதனைப் புரிந்துள்ளது. அதாவது பதிவான வாக்குகளில் 47 சதவீதத்தை இக்கட்சி பெற்றுள்ளது. இதற்கு அடுத்த இடத்தை குர்ஆன்&ஹதீஸ் பிரச்சாரத்தை பின்னணியாகக் கொண்ட அந்நூர் கட்சி பெற்றுள்ளது. இக்கட்சி க்கு 121 இடங்கள் கிடைத்துள்ளது.

கொள்கையளவிலும், புரிந்துணர்வு அடிப்படையிலும் இருகட்சிகளும் நெருக்க மானவை என்பதால் இக்கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளன.

நீண்ட நெடுங்காலமாக எகிப்து மக்கள் முபாரக்கின் கொடுங்கோல் ஆட்சியால் தங்களின் அடிப்படை மார்க்க உரிமைகளை இழந்து தவித்தனர். தாடி வைத்திருந்தால் கூட அவர்கள் உளவு அமைப்புகளால் கண்காணிக் கப்பட்டனர்.மேற்கத்திய சாக்கடைகளின் கலாச் சாரச் சீரழிவுகளால் எகிப்தின் பாரம்பரியப் பண்பாடுகள் நொறுக்கப்பட்டன.

இன்று எகிப்தியர்கள் தங்களின் விருப்பங் களையும், மனோநிலையையும் உலகிற்கு தெளிவாக தேர்தல் மூலம் விளக்கியுள்ளனர்.அங்கு கொள்கைகளுக்காகவும், மக்கள் உரிமைகளுக்காகவும் போராடிய ஹசனுல் பன்னா, இப்னு தைமிய்யா போன்ற சான்றோர் களின் தியாகங்களுக்கு காலம் கடந்து எகிப்து மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர்.

அங்கு விரைவில் சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. விடுதலை மற்றும் நீதிக் கட்சியைச் சேர்ந்த முகம்மது சாத் அல் கடாட்னி சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். விரைவில் அங்கு அதிபர் பதவிக்கான தேர்தலும் நடைபெற உள்ளது. அதிலும் இக்கூட்டணியே வெற்றிபெறும் என கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

இனிதான் எகிப்தின் புதிய ஆட்சியாளர்களுக்கு சவால்கள் காத்திருக்கின்றன. 40 ஆண்டுகால பண்பாட்டுச் சீரழிவிலிருந்தும், பொருளாதாரப் பின்னடைவிலிருந்தும் எகிப்தைத் தூக்கி நிறுத்த வேண்டிய கடும் பணிகள் காத்திருக்கின்றன. மேலும், பாலஸ்தீனத்தின் மேற்கு கரை எகிப்தின் எல்லையில் உள்ளதால் பாலஸ்தீனத்துடனான அதன் புதிய உறவு இஸ்ரேலுக்கு எரிச்சலை ஏற்படுத்தக்கூடும்.

எகிப்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் பாலஸ்தீனப் போராளிகளுக்கும், மக்களுக்கும் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.

எதிர்காலத்தில் அமெரிக்கா எகிப்துடன் நேசமாக இருக்க முயன்றாலும், இஸ்ரேல் அதற்கு தடையாகவே இருக்கும். எனவே எகிப்தின் புதிய அரசு உணர்ச்சிவசப் படாமல், உலகில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் நிகழ்வு களுக்கேற்ப ராஜதந்திரமாக தங்களது வெளியுறவுக் கொள்கையை அமைக்க வேண்டும். இவ்விஷயத்தில் தற்போதைய துருக்கியின் நிலையைப் பின்பற்றலாம்.

காரணம், தனது ஏஜெண் டான முபாரக் இல்லாத எகிப்தை இஸ்ரேலால் ஜீரணிக்க முடியவில்லை. உடனடியாக எகிப்துடன் போரில் ஈடுபட்டு எகிப்தை மிரட்டிப் பணியவைக்கும் அதிரடியிலும் அது இறங்கக்கூடும். வலிய வம்பிழுக்கும் சண்டித்தனத்தையும் செய்யக் கூடும்.

இந்த அபாயத்தை கவனத்தில் கொண்டு இவ்விஷயத் தில் எகிப்து எச்சரிக்கையாக அணுகவேண்டும். எகிப்தின் புதிய ஆட்சியாளர்களால் மத்திய கிழக்கில் புதிய போர் பதற்றம் உருவாகியுள்ளது என்ற பிரச்சாரத்தை இஸ்ரேல் தொடங்கிட வாய்ப்பினை கொடுத்துவிடக் கூடாது.

அடுத்த ஐந்தாண்டுகளுக்கு எகிப்து மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கும், ராணுவத்தை இஸ்ரேலுக்கு நிகராக உருவாக்கு வதற்கும் எகிப்தின் புதிய ஆட்சியாளர்கள் திட்டங்களைத் தீட்டவேண்டும்.

இத்தகைய நிதானமான போக்குகள் எகிப்தின் எதிர்காலத்திற்கு நல்லது. காரணம், இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் இப்போது மல்லுகட்டுவது போல் எகிப்தால் களமிறங்க முடியாது. எகிப்திடம் அந்த அளவுக்கு வலுவான ராணுவமோ மற்றும் தொழில்நுட்பங்களோ இல்லை.

அரபு லீக், உலக இஸ்லாமியக் கூட்டமைப்பு (OIC) மற்றும் அமெரிக்க&இஸ்ரேலிய எதிர்ப்பு நாடுகளுடன் வலுவான உறவை ஏற்படுத்திக் கொள்வது அதன் உடனடி பணியாக உள்ளது. மேலும் எகிப்தில் உள்ள கிறித்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் உரிமைகளையும், பாதுகாப்பையும் புதிய அரசு உறுதி செய்ய வேண்டும். அவர்களின் மகிழ்ச்சியில்தான் எகிப்தின் வலுவான எதிர்காலம் உள்ளது என்பதையும் புதிய ஆட்சியாளர்கள் மறந்துவிடக் கூடாது.
இவர்களால் கொடுங்கோல் ஆட்சியை வீழ்த்த முடிந்திருக்கிறது. ஆனால் நல்லதொரு ஆட்சியை வழிநடத்த தெரியவில்லை என்ற விமர்சனத்திற்கு ஆளாகக் கூடாது.

எகிப்தில் ஏற்பட்டுள்ள ஜனநாயக மாற்றம் அனைத்து அரபு நாடுகளிலும் பரவி, வெற்றிபெற வேண்டுமெனில், எகிப்தில் அமையும் புதிய ஆட்சியின் செயல்பாடுகள் அதற்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என உலகம் எதிர்ப்பார்க்கிறது. மாறாக, அவசர கோலத்தில் செயல்படுவார்களேயானால் புரட்சியின் பயன்கள் அர்த்தமற்றதாகி விடும்.

எம்.தமிமுன் அன்சாரி

Related

tmmk ansari 4059712111405621159

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item