எல்லா மதானிக்களுக்காகவும் SDPI போராடும்- E.அபூபக்கர்

அப்துல் நாசிர் மதானியின் விடுதலைக்காக எஸ்.டி.பி.ஐ தொடர்ந்து போராடும் என அக்கட்சியின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் கேரளா மாநிலம் கொல்லத்தில் வைத்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வைத்து கூறினார்.

கேரளா மாநிலம் கொல்லத்தில் வைத்து எஸ்.டி.பி.ஐ சார்பாக அப்துல் நாசிர் மதானியை விடுதலை செய்யக்கோரி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய அக்கட்சியின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் கூறும்போது இந்தியாவில் மதானிக்கு எதிராக அநியாயம் நிகழ்த்தப்பட்டு வருகிறது என்றும் அவருடைய விடுதலைக்காக எஸ்.டி.பி.ஐ தொடர்ந்து போராடும் என தெரிவித்தார்.

நாடு முழுவதும் மதானியைப் போன்று எண்ணற்ற அப்பாவிகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்கள். அதிலும் அவர்கள் விசாரணை கைதிகளாகவே சிறையில் பல வருடங்களாக இருந்து வருகிறார்கள்.

இந்தியாவில் வாழக்கூடிய 20 கோடி முஸ்லிம்களும் ஏதாவது ஒரு வழியில் அரசாங்க அதிகாரிகளாலும், அரசியல்வாதிகளாலும் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். 1998ஆம் ஆண்டு கோவை சிறைச்சாலையில் இருந்து மதானியை விடுதலை செய்யக் வலியுறுத்தி நாம் முதன் முதலாக போராட்டத்தில் ஈடுபட்டபோது ஒரு போராளியை விடுதலை செய்வதற்காக இன்னொரு முயற்ச்கிக்கிறார் என சிலர் நம்மை பார்த்து விமர்சனம் செய்தனர். அவர்கள் அதனை மறந்திருக்கலாம், நாம் அதை மறக்கவில்லை அதே சமயம் அவர்கள் மீது எந்த தவறான அபிப்ராயமும் கொள்ளவில்லை. கோயம்புத்தூர் குண்டு வெடிப்பின் போது தவறுதலாக குற்றவாளியாக சித்தரிக்கப்பட்டு இன்று வரை சிறைத்தண்டனை அனுபவித்து வரும் மதானியை விடுதலை செய்வதற்காக ரூபாய் 34 லட்சம் வசூலித்து கிட்டத்தட்ட 37 லட்ச ரூபாய் செலவழித்ததை நினைவு கூறினார். எஸ்.டி.பி.ஐ மதானி போன்று இன்று பொய் வழக்கு போடப்பட்டு சிறையில் வாடும் அப்பாவி மக்களின் விடுதலைக்க்காக சட்டப்படி போராடும் என்று அவர் தெரிவித்தார். இந்துத்துவ தீவிரவாதிகள் நடத்திய மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் சிக்கித்தவிக்கும் அப்பாவி மக்களுக்காகவும் எஸ்.டி.பி.ஐ போராடும் என்று தெரிவித்தார்.

நமது நாட்டில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவு, ஆதிவாசி மக்களை மாவோயிஸ்டுகளாகவும் சித்தரிக்கப்பட்டு வருகின்றனர். வருங்கால இந்தியாவின் கட்சியாக எஸ்.டி.பி.ஐ உருவெடுக்கும். அதன் வேக வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்தி விட முடியாது என இ.அபூபக்கர் கூறினார்.

எஸ்.டி.பி.ஐன் மாநிலத் தலைவர் நஸ்ருதீன் இளமரம், பி.டி.பி கட்சியின் துணைத்தலைவர் வரக்கல ராஜ், வரலாற்றாசிரியர் ஜெய் பிரகாஷ், மூவாத்துபுழா எஸ்.டி.பி.ஐ தலைவர் அஷ்ரஃப் மெளலவி, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டத்திற்கு முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Related

SDPI 7630641829286868342

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item