கூத்தாநல்லூர் இளைஞர் இயக்கம் நடத்தும் சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டம்


இஸ்லாமிய சமுதாய இயக்கங்களை ஒருங்கிணைக்கும் முகமாக இன்ஷா அல்லாஹ் வருகின்ற 25 -09 -2011 ஞாயிறுகிழமை காலை 9 :30 மணியளவில் கூத்தாநல்லூர் இளைஞர் இயக்கம் நடத்தும் சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டம் மற்றும்  துவக்க விழா, நடைபெற உள்ளது.

கூத்தாநல்லூர் இளைஞர் இயக்கம் கடந்த 3 ஆண்டுகளாக கூத்தாநல்லூர்-ல் செயல்பட்டு கொண்டிருக்கிறது. படிக்க பணம் வசதி இல்லாத  ஏழை மாணவ,மாணவியருக்கு தேவையான கல்வி கட்டணத்தை கூத்தாநல்லூர்-ல் உள்ள கொடை வள்ளல்களின் மூலமாக பெற்று தந்துள்ளது, மருத்துவ செலவுக்கு பணம் இல்லாத நம் சமுதாய சொந்தங்களுக்கு பண உதவிகள் செய்துள்ளது. அல்லாஹ்வின் மாபெரும் கருணையால் எந்த ஒரு தொய்வின்றி  உதவிகள் உரியவரிடம் சேர்க்கபடுகின்றது. அதனுடைய அடுத்த கட்ட முயற்சியாக சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டத்தையும் நடத்த உள்ளது.

அனைத்து இயக்கங்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியின்  முதற்கட்டமாக இந்த ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் TMMK , PFI , TNTJ , MMK , SDPI , முஸ்லிம் லீக், சுன்னத் ஜமாஅத் ஆகிய அமைப்புகளின் பொறுப்பாளர்களும், சமூக ஆர்வலர்களும், கூத்தாநல்லூர் ஜமாத்தினர் மற்றும் கூத்தாநல்லூர் இளைஞர்கள் அனைவரும் கலந்து கொள்ள இருகின்றனர்.

இந்த பொதுகூட்டத்தின் சிறப்பு விருந்தினர் மற்றும் சிறப்பு பேச்சாளர்களாக மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்களும், SDPI மாநில செயலாளர் A. அபூபக்கர் சித்திக் அவர்களும், தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் Dr. M. சர்வத் கான் MBBS அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற இருகின்றனர்.

முஸ்லிம் சமுதாயத்தை ஒற்றுமை படுத்தும் நோக்கில், கொள்கை ரீதியாக பிரிந்து கிடக்கும் சமுதாய இயக்கங்களை ஒருங்கிணைத்து ஒற்றுமையின் அவசியத்தை மக்களிடம் எடுத்து சொல்ல கூத்தாநல்லூர் இளைஞர் இயக்கம் எடுத்திருக்கும் முயற்சி கூத்தாநல்லூர் பொது மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று தந்துள்ளது. நூற்றுகணக்கான இளைஞர்களை உறுப்பினர்களாக கொண்டு செயல்படும் இந்த அமைப்பு கூத்தாநல்லூர் மக்களின் வாழ்க்கை தரம் உயரவும், பாகுபாடற்ற கூத்தாநல்லூர் உருவாகவும் அதன் செயல் வீரர்களை உருவாக்கி கொண்டிருக்கிறது, வருங்காலத்தில் கூத்தாநல்லூர்-ன் மாபெரும் சக்தியாக கூத்தாநல்லூர் இளைஞர் இயக்கம் மாறும் என்பதே பலரின் எதிர்பார்ப்புகளாக உள்ளது.

Related

KYA 6586771970437705337

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item