அப்சல் குருவுக்கு தூக்கை ரத்து செய்யக் கோரி காஷ்மீர் சட்டசபையில் தீர்மானம்

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்சல் குருவுக்கு தண்டனையை ரத்து செய்து கருணை காட்ட வேண்டும் என்று கோரி இன்று ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.


ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையில் சுயேச்சை உறுப்பினராக உள்ள ரஷீத் ஷேக் என்பவர் அப்சல் குருவின் தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று நோட்டீஸ் கொடுத்தார்.
இதையடுத்து இது இன்று விவாதத்திற்கு வருகிறது. விவாதத்திற்குப் பின்னர் குருவின் தண்டனையைக் குறைக்கக் கோரி தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

அப்சல் குருவுக்கு ஆதரவாகி இன்று தீர்மானம் நிறைவேற்ற காஷ்மீர் சட்டசபை தயாராகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related

Kasmir 8033184983900711377

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item