மத்திய அரசின் கல்விக் கொள்கைக்கு எதிராக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போராட்டம்

புதுடெல்லி:உயர்கல்வியில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக அகில இந்திய மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பேரணியும், போராட்டமும் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்றது.இப்போராட்டத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சார்ந்த மாணவர்கள் கலந்துக் கொண்டனர். டெல்லி மாநில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர் முஹம்மது அஃப்தாப் ஆலம் போராட்டத்தைத் தொடர்ந்து நடைபெற்றக் கூட்டத்தில் வரவேற்புரை நிகழ்த்தினார். டெல்லி மாநில கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயலாளர் ஸர்ஃப்ராஸ் அஹ்மத் தலைமைத் தாங்கினார்.

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பொதுச்செயலாளர் முஹம்மது அனீஸுஸ்ஸமான் முக்கிய உரையை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், கார்ப்பரேட் நிறுவனங்களும், அரசியல்வாதிகளும், வகுப்புவாத சக்திகளும் ஒன்றிணைந்து எவ்வாறு பொதுக்கல்வித் திட்டத்தை அழிக்க முயலுகின்றனர் என்பதை விளக்கினார். மேலும் மாணவர் சமூகமும், பெற்றோர்களும், பொதுமக்களும் மத்திய அரசின் கல்வித்துறையில் புதிய தாராளமயமாக்கல் கொள்கைக்கு எதிராக களமிறங்க அழைப்புவிடுத்தார்.

டெமோக்ரேடிக் ஸ்டுடண்ட்ஸ் யூனியனின் பிரதிநிதி செல்வி.பனோஜ்யோட்சனா இப்போராட்டத்தில் கலந்துக் கொண்டு உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், ”உயர் ஜாதியினருக்கு பலன் தரக்கூடிய அளவில் புதிய தாராளமயமாக்கல் சக்திகள் கல்விக் கொள்கையின் உருவை மாற்ற முயல்கின்றன. உலகம் முழுவதும் நடைபெறும் ஆக்கிரமிப்புகள் அனைத்துமே ஒன்றுக்கொன்றுத் தொடர்புடையதாகும்.

ஒத்தக் கொள்கையுடைய மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த ஆக்கிரமிப்பு சக்திகளை தோற்கடிக்க முன்வரவேண்டும்.” என்றார்.

போராட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் ஐக்கிய முன்னணி அரசு ’உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய கமிஷன் மசோதா 2010’ மற்றும் ’வெளிநாடுக்கல்வி நிறுவனங்கள்(நுழைவு மற்றும் செயல்பாடு) மசோதா 2010’ ஆகிய மசோதாக்களின் அனுமதியை உடனடியாக வாபஸ் பெறவேண்டும். எனக்கோரிக்கை விடுத்தனர். நிகழ்ச்சியின் முடிவில் போராட்டம் தொடர்பான மனு ஒன்று பிரதமர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டது.
source:twocircles.net

Related

pfi 3740881361266807611

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item