தேஜஸ் பத்திரிக்கை அலுவலகத்தின் மீது பகுஜன் சமாஜ் கட்சி தாக்குதல்
http://koothanallurmuslims.blogspot.com/2010/03/blog-post.html
திருவனந்தபுரம்:மாயாவதியைக் குறித்து செய்தி வெளியிட்டதைக் கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சியைச் சார்ந்த குண்டர்கள் திருவனந்தபுரம் தேஜஸ் அலுவலகத்தின் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர்.
நேற்று இரவு 7.20 க்கு 25 பேரைக் கொண்ட பகுஜன்சமாஜ் கட்சியியைச் சார்ந்தவர்கள் தான் இச்செயலைச் செய்துள்ளனர். அலுவலகத்தின்மீது நிறுத்தப்பட்டிருந்த பணியாளர்களின் வாகனங்களையும் சேதப்படுத்தினர்.
10 நிமிடங்கள் நீண்ட இத்தாக்குதலின் போது தேஜஸ் பத்திரிகையின் பிரதியை தீவைத்துக் கொளுத்தினர். தேஜஸ் அலுவலகம் மட்டுமன்றி அருகிலிலுள்ள வேறு சில அலுவலகங்களின் மீதும் கல்வீசி தாக்கினர். தம்பானூர் கண்ட்ரோல் ரூம் மற்றும் போர்ட் ஸ்டேசன்களிலிருந்து போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வுச் செய்தனர். தாக்குதல் நடத்தியவர்களை கைதுச் செய்வதற்கு போலீஸ் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்