அதிரையில் பள்ளிவாசல் சுவர் இடிப்பு; இடித்த அயோக்கியனை கைது செய்ய வலியுறுத்தி பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்
http://koothanallurmuslims.blogspot.com/2010/03/blog-post_20.html
அதிரை பழஞ்செட்டி தெருவிலுள்ள அல்லாஹ்வின் இறை இல்லம் A.J பள்ளியின் சுற்று சுவர் நேற்று 10-03-2010 நள்ளிரவில் காவி கயவர்களினால் இடிக்கப்பட்டது. உடனே தகவல் அறிந்து அங்கிருந்த முஸ்லிம் அமைப்பினர் விரைந்து சென்றனர். உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பள்ளியின் சுவரை கட்ட மட்டும் அனுமதி கொடுத்தனர். உடனே பள்ளியின் செலவில் சுவர் அல்லாஹ்வின் உதவியோடு கட்டப்பட்டுள்ளது. இது போல் இரண்டு முறை நடந்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.
A.J பள்ளி சுற்றுச்சுவரை இடித்த இந்து தீவிரவாதியை கைது செய்ய வலியுறுத்தி அன்று காலை 10 மணியளவில் கடையடைப்பு, பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இக்கண்டன பேரணியில் சமுதாய இயக்கங்களுடன் திரளான பொது மக்களும் கலந்துக் கொண்டு கண்டனத்தை வெளிப்படுத்தினர்.