
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மிஸ்ரா கமிஷன் அறிக்கையை அமல் படுத்த கோரி
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா-வின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா-
வின் திருவாரூர் மாவட்டத் தலைவர் பைசல் தலைமை உரை நிகழ்த்தினர்,
கூத்தாநல்லூர் நகர தலைவர் காதர் மைதீன் வரவேற்பு உரை பேசிய பின்னர் கண்டன கோஷம் எழுப்ப பட்டது,

கண்டன உரையை தஞ்சை மாவட்ட SDPI தலைவர் முஹம்மது உமர் அவர்கள் நிகழ்த்தினார்.

பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியாவின் திருவாரூர் மாவட்ட செயலாளர் முஹம்மது லத்திப், கேம்பஸ் பிரான்ட் ஆப் இந்தியாவின் திருவாரூர் மாவட்ட செயலாளர் அம்ஜத் கான், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கு கொண்டனர், கூத்தாநல்லூர், மன்னார்குடி, முத்துபேட்டை போன்ற ஊர்களில் இருந்து பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியாவின் செயல் வீரர்கள் பலர் கலந்துகொண்டனர்.