சென்னை:ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைப்படி முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீட்டை வலியுறுத்தி கவர்னர் மாளிகையை நோக்கி பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பேரணி

சென்னை: கடந்த மார்ச் 25 ஆம் தேதி முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்கான மிஸ்ரா கமிஷனின் பரிந்துரையை அமுல்படுத்த கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் கவர்னர் மாளிகையை நோக்கி மாபெரும் பேரணி நடைபெற்றது.

இப்பேரணி காலை 11.30 மணிக்கு எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு மைதானத்திலிருந்து துவங்கியது. இப்பேரணிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஜனாப். முகமது அலி ஜின்னா அவர்கள் தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

பேரணியின் முடிவில் பேசிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஜனாப்.முகமது அலி ஜின்னா அவர்கள் ” இந்தியா முழுவதும் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரையான முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த இரண்டு மாதங்களாக மாபெரும் பிரச்சார இயக்கத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தி வருகிறது. அதில் ஒரு பகுதிதான் இன்று எழுச்சியுடன் நடந்து கொண்டு இருக்கும் கவர்னர் மாளிகையை நோக்கிய பேரணி.

இப்பேரணியின் நோக்கம் முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீட்டை மத்திய அரசு உடனே வழங்கவேண்டும் சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கேரளா, கர்நாடகவில் வழங்கியது போல் இந்தியா முழுவதும் முஸ்லிம்களுக்கு இடஓதுக்கீடு வழங்கவும் என்ற தனது தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கூறியுள்ளது. இப்பொழுது அதை செயல்படுத்தும் தருணம் வந்துவிட்டது உடனடியாக 10% இடஒதுக்கீட்டை முஸ்லிகளுக்கு வழங்க வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது. மாநிலத்தில் ஆளும் தி.மு.க அரசும் முஸ்லிம்களுக்கான இடஒதுகீட்டை வலியுறுத்துவோம் என்று தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது. அதனை தொடர்ந்து வலியுறுத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக் கொள்கிறது என்று பேசினார்.

அதனைத்தொடர்ந்து தேசிய செயற்குழு உறுப்பினர் டாக்டர் ஆவாத் ஷரிப் அவர்கள் பேசுகையில், "அரசியல் சாசன சட்டம் 15(4) மற்றும் 16(4) அடிப்படையில் பின்தங்கிய சமூகத்தை முன்னேற்ற இடஒதுகீட்டை பெருவது ஜனநாயக உரிமை என்று கூறிகிறது. பின் தங்கிய சமுகங்களில் முஸ்லிம்களே முன்னிலையில் இருக்கிறார்கள். 1882 இருந்தே சர்.செய்யது அவர்களால் முஸ்லிம்களின் பிந்தங்கிய நிலையை உயர்த்த இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 1953ல் காகா கலேல்கர் கமிஷன், 1983 கோபல் சிங் கமிஷன், 1989 மண்டல் கமிஷன், 2006 சச்சார் கமிஷன் தற்பொழுது மிஸ்ரா கமிஷன் என அனைத்து கமிஷன்களும் முஸ்லிம்கள் பின் தங்கிய நிலையில் இருக்கிறார்கள் என்று கண்டறிந்துள்ளது. ஆனால் துரதிஷ்டமாக இதுவரை எந்த நடவடிக்கையும், எடுக்கப்படவில்லை. இந்த இடஒதுக்கீட்டை பெரும் வரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போராடும்" என்று கூறினார்.

அதனை தொடர்ந்து மாநில செயற்குழு உறுப்பினர் B.S. அப்துல் ஹமீது அவர்கள் பேசும் போது, "நமது இந்திய தேசத்தை உருவாக்கிய சமுகம் இன்று வாழ்வதற்கு வீதியில் இறங்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இதற்கு காரணம் சதிகளும் பாசிஸ்டுகளின் சூழ்ச்சிளே ஆகும் வெள்ளையனை எதிர்த்த இந்த சமுகம் அடிமைகளாக வாழவேண்டும் என்ற அடிப்படையில் அனைத்து துறைகளிலும் அனைத்து ரீதியிலும் புறக்கணிக்கப்படுகிறார்கள், இதனை சரிசெய்ய அரசு இடஒதுக்கீட்டை துரிதமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

அதனைத்தொடர்ந்து சோஷியல் டெமாக்ரெடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஜனாப். சேக் முஹம்மது தெஹ்லான் பாகவி அவர்கள் பேசுகையில், "மண்டல் கமிஷனை காங்கிரஸ் அரசாங்கம் அமுல்படுத்த 10 ஆண்டுகள் எடுத்து கொண்டது. அதே வரலாற்று தவறை மிஸ்ரா கமிஷனில் காங்கிரஸ் செய்யுமாயின் வரும்தேர்தலில் காங்கிரஸை கூட்டணி அரசு முஸ்லிம்கள் புறக்கணிக்கும் நிலையை தவிர்க்க முடியாது. மகளிர் இடஒதுக்கீட்டை கடும் எதிர்ப்புகளுக்கு இடையில் தாக்கல் செய்த காங்கிரஸ் அரசு முஸ்லிம்களின் இடஒதுகீட்டை அமுல்படுத்துவதற்க்கு ஒத்த கருத்து தேவை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது" என்று கூறினார்.

பின்னர் மாநில தலைவர் மற்றும் மாநில பிரதிநிதிகள் கவர்னரை சந்தித்து கோரிக்கை மனுவை [Memorandum] அளித்தனர்.

முஸ்லிகளுக்கான இட ஒதுக்கீடு வழங்க கோரி பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நாடுமுழுவதும் தெருமுனை கூட்டங்கள் வாகன அணிவகுப்புகள் கருத்தரங்கம், தெரு நாடகங்கள், போஸ்டர் பிரச்சாரம், கண்காட்சி, கலச்சார விழிப்புணர்வு பிரச்சாரங்கள் போன்றவை மேற்கொள்ளப்பட்டது. டெல்லி, தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி, கர்நாடகா, கோவா, ஆந்திரா, மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம், இராஜஸ்தான், மணிப்பூர், மேற்கு வங்காளம், பீகார், உத்திர பிரதேசம், ஹரியானா மற்றும் அனைத்து மாநிலங்களிலும் இப்பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக மார்ச் 15 அன்று பாராளுமன்றத்தை நோக்கி மாபெரும் பேரணி நடைபெற்றது. பிரதமரிடம் கோரிக்கை மனுவும் கொடுக்கப்பட்டது.

source:popularfronttn.org

Related

pfi 2695227991568006961

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item