மத்திய சென்னை வன்முறை: நெல்லையில் த.மு.மு.கவினர் ஆர்ப்பாட்டம்
http://koothanallurmuslims.blogspot.com/2009/05/blog-post_8172.html
திருநெல்வேலி : நெல்லையில் த.மு.மு.க.,நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.,,கொடிகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
மத்திய சென்னையில் த.மு.மு.க.,வின் அரசியல் கட்சியான ம.ம.க.,சார்பில் ஹைதர்அலி போட்டியிட்டார். தேர்தலின் போது அங்கு ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் த.மு.மு.க.,வினரை ஓட்டுபோடவிடாமல் தி.மு.க.,வினர் தடுத்ததாக தகவல்கள் வெளியாயின. இதனை கண்டித்து இன்று நெல்லையில் த.மு.மு.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாளையங்கோட்டை ஜவஹர் மைதானத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு த.மு.மு.க.,மாவட்ட தலைவர் ரபீக், மாவட்ட செயலாளர் உஸ்மான்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில் தி.மு.க.,வையும் கருணாநிதியையும் விமர்சித்தனர். அப்போது தி.மு.க.,கொடிகளையும் தீயிட்டு கொளுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்தனர்.