மனிதநேயமக்கள்கட்சி மீதான தாக்குதலுக்கு 'மனிதநேயம்' உள்ளவர்களின் கண்டனங்கள்!

மத்திய சென்னை தொகுதி ஐஸ்அவுஸ் பகுதியில் கள்ளஒட்டு போடமுயன்ற திமுக கும்பலை தடுக்கமுயன்ற மனிதநேய மக்கள் கட்சியினரை தாக்கியதோடுமுஸ்லிம்களை வாக்களிக்கவிடாமல் அச்சுறுத்திய திமுக வன்முறை கும்பலை அரசியல் கட்சிகளும், இஸ்லாமிய அமைப்புகளும் கடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டதோடு, வன்முறை நடந்த பகுதிகளில் மறுதேர்தல் நடத்திட கோரிக்கை வைத்துள்ளது.

பாப்புலர் ஃபிரண்ட் கடும் கண்டனம்;


இந்திய தவ்ஹீத்ஜமாஅத் கண்டனம்;


அண்ணாதி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா;
நேற்று காலை மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டு தங்கள் வாக்குகளை செலுத்திக் கொண்டிருந்தனர். திடீரென்று திமுக ரவுடி கும்பல் அந்த வாக்குச் சாவடிக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட முனைந்துள்ளது.
இதைத் தட்டிக் கேட்ட இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்களை பயங்கரமான ஆயுதங்களை கொண்டு கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதன் காரணமாக பலருக்கு வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக அந்தப் பகுதியே போர்க்களம் போல் காட்சி அளிக்கிறது.
கழக தொண்டர்கள் மீதும், இஸ்லாமிய சமுதாயத்தினர் மீதும் திமுகவினர் நடத்தியுள்ள கொலை வெறித் தாக்குதல்களுக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஐஸ்ஹவுஸ் பகுதியில், வாக்காளர்களை விரட்டிவிட்டு கள்ள ஓட்டுப்போட்டுக்கொண்டிருந்த கும்பலை மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலியும், அவரது கட்சியைச் சேர்ந்த தொண்டர்களும் காவல் துறையினரிடம் அடையாளம் காட்டி அப்புறப்படுத்த முயற்சித்தபோது, கள்ள ஓட்டுப்போட முயற்சித்த கும்பலைச் சேர்ந்தவர்கள் ஹைதர் அலியையும், அவரது கட்சியினரையும் கடுமையாக தாக்கி இருக்கிறார்கள்.
இதில் 6 தொண்டர்கள் அரிவாளால் வெட்டப்பட்டு இருக்கிறார்கள். இந்த வன்முறை தாக்குதலையும், இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த காவல்துறையினரின் போக்கையும் வன்மையாக கண்டிக்கிறேன் என அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.
நன்றி:தட்ஸ் தமிழ்
ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ;
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை வருமாறு:- நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நாளான நேற்று சென்னையில் ஆளும் கட்சி குண்டர்களும், ரவுடிகளும் திட்டமிட்டு மனிநேய மக்கள் கட்சியின் முன்னணி நிர்வாகி களையும், தொண்டர்களையும் உருட்டுக்கட்டைகளாலும், இரும்புக் குழாய்களாலும் தாக்கியதில் இஸ்லாமிய சகோதரர்கள் படுகாயம் அடைந்தனர்.இது திட்டமிட்ட வன்முறைத் தாக்குதலாகும். இதுவரை நடைபெற்ற எந்தத் தேர்தலிலும் தலைநகர் சென்னையில் இஸ்லாமிய மக்கள் தாக்குதலுக்கு ஆளானதில்லை. ஆனால், முதலமைச்சரின் பேரன் போட்டியிடுகின்ற மத்திய சென்னையில் ஆளும் கட்சிக்கு தோல்வி ஏற்படும் என்பதால்தான் சிறுபான்மை மக்கள் மீது ஆத்திரத்தோடு திமுக குண்டர்கள் இத்தாக்குதலை நடத்தி உள்ளனர்.கருணாநிதி முதலமைச்சர் பொறுப் பேற்ற நாள் முதல் ஜனநாயகத்தை சாகடித்து, காவல்துறையின் துணை யுடன், குண்டர்களின் பேயாட்டம் நடந்த வண்ணம் இருக்கிறது. மதுரை மாநகரில் முதலமைச்சரின் மகன் படுகொலைகளை ஏவிவிட்டு நடத்தி முடித்தபின் முதல்வரின் பாராட்டுகளோடு பவனி வருகிறார். தமிழ்நாட்டில் தற்போது இடிஅமீன் ஆட்சி நடைபெறுகிறது. தாக்கப்பட்ட வர்களையே போலீசார் கைது செய்யும் அக்கிரமம் நடக்கிறது.மனிதநேய மக்கள் கட்சியினர் மீது ஆளுங்கட்சி நடத்திய தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லை யேல் நடத்தப்பட்ட அராஜகத்துக்கு விளைவுகளை அனுபவிக்க நேரும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.[மாலை சுடர்]

Related

TMMK 957366286090518571

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item