கள்ள ஓட்டு போட வந்தவர்களை தடுத்த மனிதநேய மக்கள் கட்சியினர் மீது அருவாள் வெட்டு
http://koothanallurmuslims.blogspot.com/2009/05/blog-post_13.html
மனிதநேய மக்கள் கட்சியின் தொண்டர்கள் மீது அருவாள் வெட்டு மத்திய சென்னை வேட்பாளர் செ.ஹைதர் அலியின் வாகனம் அடித்து நொறுக்ப்பட்டது.
மத்திய சென்னை தொகுதியில் கள்ள ஓட்டு போட வந்தவர்களை தடுத்த மனிதநேய மக்கள் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது அருவாள் வெட்டு.
கள்ள ஓட்டுப்போட வந்த திமுகவைச் சேர்ந்த குண்டகைளை தடுக்கப் போன மனிதநேய மக்கள் கட்சியினர் மீது 500க்கும் மேற்பட்ட திமுக குண்டர்கள் அருவாள் மற்றும் கத்திகளுடன் கொடூர தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் 10க்கும் மேற்பட்ட த.மு.மு.க தொண்டர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர் அதில் சிலருக்கு கையில் வெட்டு சிலருக்கு முகத்தில் வெட்டு அதில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.
கலவரம் கேள்விப்பட்டு கமிஷ்னர் நிகழ்விடம் வந்து பார்வையிட்டுள்ளார்.
வெட்டுப்பட்டவர்களின் விபரம். ஜாகிர், மீராமைதீன், வசீம், சலாவுதீன், இபுறாகீம், மற்றும் சுதீர் ஆகியோர் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.