மதமோதல்களை உருவாக்குவதே சிவசேனாவின் வேலை
http://koothanallurmuslims.blogspot.com/2009/11/blog-post_28.html
தேவையற்ற பிரச்சினைகளை கிளப்பி குழப்பத்தை ஏற்படுத்தி நாட்டில் மதமோதல்களை உருவாக்குவதே சிவசேனாவின் வேலை - நாடாளுமன்றத்தில் வேலூர் எம்.பி., எம். அப்துர் ரஹ்மான் கடும் கண்டனம்
தேவையற்ற பிரச்சினை களையெல்லாம் கிளப்பி அதன் மூலம் குழப்பத்தை ஏற்படுத்தி நாட்டில் மத மோதல்களை உருவாக்கி ரத்தம் குடிப்பது சிவசேனா விற்கு பழகிப் போன ஒன்றாகி விட்டது. அதை அனுமதிக்கக் கூடாது என நாடாளுமன்றத்தில் வேலூர் தொகுதி உறுப்பி னர் எம். அப்துர் ரஹ்மான் கடும் கண்டனம் தெரிவித்து பேசினார்.
நாடாளுமன்றத்தில் 25-ம் தேதி மாலை 6 மணிக்கு சிவசேனா உறுப் பினர் சந்திரகாந்த் கேரே அவசர அவசிய அன்றாட தகவல் தரும் நிகழ்வுகள் குறித்து பிரச்சினை எழுப் பினார். அப்போது அவர் குறிப்பிடுகையில்,
ஹஅண்மையில் தேவ்பந்த் உலமாக்கள் மாநாட்டில் வந்தே மாதரம் பாடலை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது@ இது இந்திய இறை யாண்மைக்கு முற்றிலும் எதிரானது| என்ற கருத்தை தெரிவித்தார்.
வேலூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் உடனடியாக குறுக்கிட்டு இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்துப் பேசினார்.
அப்போது அவர் குறிப் பிட்டதாவது-
உத்தரப்பிரதேச மாநி லம் தேவ்பந்தில் கூடிய உலமாக்கள் மாநாட்டில் வந்தே மாதரம் பாடலை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக உறுப்பினர் சொல்வது முற்றிலும் பொய்யான தகவல். வந்தே மாதரம் பாடலை எவரும் கண் டிக்கவில்லை. முஸ்லிம் களின் ஓர் இறை கொள் கைக்கு ஒத்து வராதது என்கிற கருத்தை பதிவு செய்துள்ளார்களே தவிர, பாடலை கண்டனம் செய்ய எந்த அவசியமும் இல்லை.
ஜனநாயகரீதியில் எந்த இடத்திலும், எந்தப் பாட லாக இருந்தாலும் இஸ் லாத்தின் இறை அச்சக் கொள்கைக்கு மாறாக இருந்தால் அதை துணிவு டன் எதிர்கொள்வது எங் கள் கடமை. அந்த விதத் தில்தான் வந்தே மாதரம் பாடலை கட்டாயமாக பாடச் சொல்வது முஸ்லிம் களுக்கு உடன்பாடானது அல்ல என்ற கருத்தை உலமாக்களின் மாநாட்டில் பதிவு செய்திருக்கிறார்கள்.
இதனை நாட்டினு டைய இறையாண்மைக்கு எதிரானது எனச் சொல்லி நாடாளுமன்றத்திலேயே அதை பதிவு செய்ய முயன்று நாட்டில் குழப் பத்தை உருவாக்கத் துணி வது கடும் ஆட்சேபனைக் குரியது. இப்படித்தான் பிரச்சினைகளை கிளப்பி குழப்பத்தை உருவாக்கி நாட்டில் மத மோதல்களை தூண்டி ரத்தம் குடிப்பது சிவசேனாவிற்கு பழகிப் போன ஒன்றாகி விட்டது.
இதுபோன்ற அப்பட்ட மான - அநாகரீகமான போக்கை சிவசேனா நிறுத்திக் கொள்ள வேண் டும். அவரது இந்தப் பேச்சை அவையில் பதிவு செய்யக்கூடாது என குறிப்பிட்டார். அப்போது அவையில் கூச்சல் - குழப்பம் ஏற்பட்டது.
இந்த கூச்சல் - குழப்பத் துக்கிடையே குறுக்கிட்டுப் பேசிய நாடாளுமன்ற விவகார இணையமைச்சர் நாராயணசாமி, மாண்பு மிகு உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் பேசுவது மிகச்சரியானதுதான். ஏனெனில், தேவ்பந்த் உலமாக்கள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச் சர் ப. சிதம்பரம் பங்கேற்று உரையாற்றியுள்ளார். அவ ருடைய பேச்சு அனைத்து ஊடகங்களிலும் வெளி வந்துள்ளது. அந்த மாநாட் டில் நடந்த அனைத்து நிகழ்வுகளும் செய்தி ஊடகங்களில் வெளிவந் துள்ளன. அதில் எந்தத் தவறும் இல்லை.
எனவே, தவறான தகவலை சிவசேனா உறுப் பினர் பதிவு செய்வதற்கு சபை தலைவர் அனுமதிக் கக் கூடாது என குறிப் பிட்டார்.
இதனைத் தொடர்ந்து மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் மல்லி கார்ஜுன் கார்கே குறுக் கிட்டு, ஹதேவையற்ற பிரச் சினையை கிளப்பாமல் சிவசேனா உறுப்பினர் தன் வேலையை மட்டும் பார்க் கட்டும் என குறிப்பிட் டார்.
இதனையடுத்து, சிவசேனா உறுப்பினர் சந்திர காந்த் கேரே தன் பேச்சை நிறுத்தி விட்டு அமர்ந்து விட்டார்.
லிபரான் கமிஷன் அறிக்கை மீது விவாதம்
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பாபரி மஸ்ஜித் தகர்ப்பு பற்றிய லிபரான் கமிஷன் அறிக்கை மீது டிசம்பர் 1-ம் தேதி நடைபெறக்கூடிய விவாதத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் பங்கேற்றுப் பேச உள்ளார்.