கேரளா: போலீஸ் துப்பாக்கிச்சூட்டிலும் சங்க்பரிவாரின் கத்திக்குத்திலும் இரண்டு முஸ்லிம்கள் பலி
http://koothanallurmuslims.blogspot.com/2009/11/blog-post_17.html
காஸர்கோடு: முஸ்லீம் லீக் மாவட்ட கமிட்டியின் தலைமையில் காஸர்கோடு புதிய பேருந்து நிலையத்தின் அருகில் நடைபெற்ற தேசிய மாநில தலைவர்களுக்கான வரவேற்பு அளிக்கும் பொதுக்கூட்டத்திற்கிடையே ஏற்பட்ட வன்முறையில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவரும், பாரதீயஜனதாவைச்சார்ந்த குண்டர்களின் கத்திக்குத்தில் இன்னொருவரும் மரணமடைந்தனர்.
நான்கு பேர் கத்தியால் குத்தப்பட்டுள்ளனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் உள்ளிட்ட 20 போலீசாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான வாகனங்களுக்கும், வியாபார ஸ்தாபனங்களும் கல் வீச்சுக்கு இரையாயின.
ஷஃபீக்(வயது 22) என்பவர் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் பலியானார். பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொள்ள வந்த முஹம்மது அஸ்ஹர்(வயது 21) பா.ஜ.க குண்டர்களின் கத்திக்குத்தில் பலியானார். பா.ஜ.க வினர்தான் அஸ்ஹரை கொன்றதாக காவல்துறை கூறியுள்ளது. முனீர்(வயது 23), அஷ்ரஃப்(வயது 28), ஸைனுத்தீன்(வயது 26), முனீர்(வயது 35) ஆகியோரும் கத்தியால் குத்தப்பட்டுள்ளனர். கடுமையான காயம் ஏற்பட்டுள்ள முனீர் மங்களூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பா.ஜ.க வினர்தான் இவர்களை கத்தியால் குத்தியுள்ளனர்.
அமய் ரோட்டிலிலுள்ள ஸலஃபி சென்டர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. கல்வீச்சில் பள்ளிவாசலின் கதவுகளும், ஜன்னல்களும் தகர்ந்தது. போலீசாரால் சுடப்பட்ட ஷஃபீக்கிற்கு நெஞ்சில் குண்டு பாய்ந்துள்ளது. 3 மாதத்திற்கு முன்புதான் இவர் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காஸர்கோடு பழைய ப்ரஸ்கிளப் ஜங்சனில் போலீசிற்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொள்ளவந்த தொண்டர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. வன்முறையைத்தொடர்ந்து போலீசார்மீது கல்வீச்சு நடைபெற்றது. முதலில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட போலீஸ் தொண்டர்களுக்கு நேராக துப்பாக்கிச்சூடு நடத்தியது. வன்முறையத்தொடர்ந்து காஸர் கோடு நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் 2 நாட்களுக்கு 144 தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்