மும்பை தாக்குதலில் அமெரிக்க பயங்கரவாதியின் சதி
மும்பை பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்து ஓராண்டு முடிந்து விட்டது. அந்த சோக நிகழ்வை வெறுமனே வேத னைப்படும் சோக நிகழ்வாக மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது.
நாட்டிற்கு ஏற்பட்ட பெரிய அபாய மாகவே கருதிட முடியும். தென்கிழக்கு ஆசியாவின் வல்லரசாக விளங்கும் இந்தியாவின் பெருமைக்கும் வல்லமைக் கும் எதிராக இழிவுபடுத்தும் நோக்கம் அதில் இருந்தது.
இந்தியாவின் நியூயார்க் என செல்ல மாக அழைக்கப்படும் இந்தியாவின் வர்த் தக தலைநகரமான மும்பை மாநகரம் பல மணிநேரங்கள் பயங்கரவாதிகளின் முற்றுகையில் தவித்தது. மும்பை மாநகரில் முக்கியப் பகுதிகள் குறிப்பாக சத்ரபதி சிவாஜி தொடர் வண்டி நிலையம், தாஜ் ஹோட்டல், நாரிமண்பாயிண்ட் என பல்வேறு பகுதிகளும் தாக்குதலுக்கு இலக்காயின.
மும்பை பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற நவம்பர் 20லிம் தேதிக்கு முந்தைய தினம் வரை நாட்டையே பரபரபுக்குள்ளாக்கிய மாலேகான் குண்டு வெடிப்புக் குற்றவாளிகள் குறித்து தகவல்கள் தொடர்ந்து வெளிவந்து இந்திய நாட்டையே அதிரச் செய்தது.
இந்த துணிச்சலான பேட்டி இந்தியாவின் முன்னணி ஆங்கில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. இந்தப் பரபரப்பு சில மணிநேரங்கள் மட்டுமே நீடித்த நிலை யில் மும்பை பயங்கரவாதத் தாக்குதலும் அதனைத் தொடர்ந்து குறுகிய நேரத் தில் தீவிரவாத தடுப்புபடையின் தலைவர் ஹேமந்த்கர்கரேயின் மர்ம படு கொலையும் நிகழ்ந்தது.
நாட்டின் முக்கிய துறைமுக நகரத்துக் குள் புகுந்து பல மணிநேர தாக்குதல் நடத்தியவர்கள் யார்? அவர்களுக்கு அத்தகைய துணிச்சல் எங்கிருந்து வந் தது? ஒரு வலுவான பின்னணி இல்லாமல் இந்த தாக்குதலை யாரும் நிகழ்த்தியிருக்க முடியாது! என்ற பலத்த சந்தேகங்களுக்கு முக்கியத்துவம் வழங்காமல் யூகங்களுக் கும் கால காலமாக திட்டமிட்டு வரும் வியூகங்களுக்கும் வலுசேர்க்கும் வித மாகவே செய்திகள் புறப்பட்டனவே தவிர மும்பை பயங்கரவாதத் தாக்குதல் குறித்தும் மும்பையையே முற்றுகையிட்டு தாக்குதல் தொடுத்த பயங்கரவாதிகள் குறித்தும் கூர்மையான தகவல்கள் கண்ட றியப்படவில்லை என்பதை உணர்த்தும் விதமாக அன்மையில் தொடர்ச்சியான நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
அவை சர்வதேச அளவில் பதட்டத்தையும், பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.
அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் கோல்மேன் ஹேட்லி என்ற பயங்கரவாதி குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் கோல்மேன் ஹேட்லி மற்றும் தஹாவுர்ரானா ஆகிய இருவரும் பாகிஸ்தானிருந்து செயல்படும் லஷ்கர்லிஇலிதொய்பா வோடு சேர்ந்து கொண்டு இவர்கள் இயங்குவதாகவும் இந்தியாவிலும் டென் மார்க்கிலும் பயங்கர வாதத் தாக்குதல்களை நிகழ்த்த இவர்கள் திட்டமிட்டு வருவதாகவும் இவர்களை சமீபத்தில் கைது செய்த அமெரிக்க உளவுத்துறை கூறியது.
டேவிட் கோல்மேன் ஹேட்லி என்ற அமெரிக்கன் 2006 முதல் 2009 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட ஒன் பது முறை இந்தியா வந்துள்ளான். ஒவ்வொரு தடவையும் படுபயங்கர திட்டத்துடன் தான் இந்த சதிகாரன் இந்தியா வந்து சென்றுள்ளதாக இந்திய புலனாய்வு வட்டாரங்கள் இப்போது தெரி வித்துள்ளன.
2006 ஆம் ஆண்டிலிருந்து 2009 வரை குடியரசு தினங்களும், சுதந்திர தினங்களும், டிசம்பர் 6 உள்ளிட்ட பாது காப்பு கெடுபிடி மிகுந்த நாட்களில் பல முறை வந்து சென்றுள்ளான். ஆனால் அப் போதெல்லாம் பாதுகாப்பு கெடுபிடிகள் ரெய்டுகள் என்ற பெயரில் அப்பாவிகள் வளைத்து பிடித்து விசாரிக்கப்பட்டார்களே தவிர டேவிட்கோல்மேன் ஹேட்லி போன்ற அதி பயங்கரவாதிகள் அந்தக் காலகட்டங்களில் பிடிக்கப்பட்டதாகவோ ஏன் விசாரிக்கப்பட்டதாகவே, எந்தச் செய்தியும் ஏன் செய்தியின் சுவடுகூட இல்லை.
அதைவிட வேதனை என்னவெனில் பயங்கரவாதிகள் ஹேட்லி 9 முறையும் வந்து சென்ற இடங்கள் எவைஎவை தெரியுமா?
லக்னோவுக்கு ஹேட்லி பலமுறை வந்துள்ளார். லக்னோவை நிர்வகித்து வரும் உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் செல்வி மாயாவதி அவர்கள் உ.பியின் ஆசம்கார் என்ற மாவட்டத்தில் உள்ள அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் கடுமையாக துன்புறுத்திய நிகழ்வுகள் எண்ணற்றவை நடைபெற்றன.
ஒரு கட்டத்தில் வெளியூர்களில் தங்கி மேல்படிப்பு படித்து வரும் தங்கள் வீட்டுப்பிள்ளைகளை ஊருக்கு வரவேண்டாம் என பெற்றோர்களே கெஞ்சும் அளவுக்கு உ.பி. காவல் துறையினரின் கெடுபிடி இருந்தது.
மும்பை பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மும்பையில் விசாரணை என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட சமூக இளைஞர்கள் அடைந்த துன்பங்கள் யாராலும் மறுக்க முடியாதவை.
குஜராத் மாநில அகமதாபாத்தில் குறித்தும் மோடி அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்தும் நாம் யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தீவிரவாதத்தை ஒடுக்குகிறோம் என மூர்க்கத்தனமான நடவடிக்கைகள் மூலம் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கருவறுத்த மாநிலங்களின் முக்கிய நகரங்களில் தான் உலக மகா பயங்கரவாதிகள் டேவிட் கோல்மேன் ஹேட்லி சொந்த நந்தவனத்தில் உலவுவதைப் போல் உலாவியுள்ளான்.
அப்போதெல்லாம் பயங்கரவாதி ஹேட்லியைக் குறித்து எந்த தகவலையும் பெற திராணியற்ற நிலையிலேயே டெல்லி, மும்பை, லக்னோ, அகமதாபாத் நகரங் ககளை கண்காணிக்கும் அந்தந்த மாநில புலனாய்வு அமைப்புகள் இருந்துள்ளன அவர்களுக்கு தீவிரவாதிகள் என்றாலே சிறுபான்மை சமூக இளைஞர்கள் தானே நினைவுக்கு வருவார்கள் இல்லையா?
ஏதாவது அப்பாவி இளைஞனை குறிப்பாக முஸ்லிம் இளைஞனை பிடித்து சித்திரவதை செய்தால் போதும் அடிதாங்காமல் அந்த இளைஞன் தானே தீவிரவாதி என ஒப்புக்கொள்வான் அவன் தீவிரவாதி என தாங்களே கண்டுபிடித்ததை போல பக்கம் பக்கமாக கற்பனைக் கட்டுக் கதைகளை கட்டவிழ்த்து விட ஏராளமான வெகுஜன ஊடகங்கள் நம் நாட்டில் உண்டு. இத்தகைய முக்கிய(?) கடமைகள் இருக்கும் போது ஹேட்லி போன்ற உத்தமர்களை(!)க் கண்காணிக்க குறிப்பிட்ட அந்த மாநில புலனாய்வு அமைப்புகளுக்கு பாவம் ஏதுநேரம்? ஏதாவது நாச வேலைகள் நடந்தால் எங்காவது தாடிவைத்த தொப்பி அணிந்த ஒரு இளிச்சவாய் இளைஞன் நமக்கென்று கிடைக்காமலா போவான் என்ற வக்கிர சிந்தனையைத் தாண்டி புத்திசாலித் தனமாக யோசிக்க சில புலனாய்வுப் புலிகளுக்கு இயலாமலே போய்விட்டதோ என்ற வலுவான சந்தேகம் ஹேட்லியின் விஷயத்தில் உறுதியாகி விட்டது. (இந்தப் புலனாய்வு மேதாவிகள் பேசாமல் விஜய் காந்த் நடிக்கும் திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதப் போகலாம் என்கிறீர்களா?)
2006-லிருந்து 2009 வரை நாட்டில் நடந்த அனைத்து அசம்பாவிதங்களிலும் பயங்கரவாதி டேவிட் கோல் மேன் ஹேட்லிக்கு உள்ள தொடர்பை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்பதே நாட்டு மக்களின் கோரிக்கையாகும்.
இதனிடையே அமெரிக்க புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்ட டேவிட்கோல்மேனை விசாரிக்க அமெரிக்கா சென்ற இந்திய புலனாய்வு அதிகாரிகளுக்கு அனுமதி கிடைக்காத தால் இந்தியக்குழு வெறுங்கையுடன் தொங்கிய முகத்துடன் ஏமாற்றத்துடன் இந்தியா திரும்பியது.
அமெரிக்கா சென்றிருந்த இந்திய புலனாய்வுக் குழுவினர் வாஷிங்டனில் தங்கி அந்நாட்டு புலனாய்வுக் குழு வினருடன் டேவிட் கோல் மேனின் சதித்திட்டம் குறித்து விரிவான ஆலோச னைகள் மற்றும் தகவல்கள் பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்பட்ட போதும் சிகாகோ சிறைச்சாலையில் அடைக் கப்பட்ட டேவிட் கோல் மேனை தாங்கள் விசாரிக்க வேண்டும் என்ற இந்தியக்குழுவினரின் கோரிக்கைக்கு அமெரிக்கா செவிசாய்க்கவேயில்லை.
மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் வெளிநாட்டுக்காரர்கள் குறிப்பாக யூதர் கள் கொல்லப்பட்டனர் என்ற ஒரே காரணத்துக்காக விமானங்களில் சீசன் டிக்கெட் எடுக்காத குறையாக அமெரிக்கா உள்ளிட்டமேற்கு நாடுகளிருந்து புல னாய்வு குழுக்கள் வந்தவண்ணம் இருந்தன.
இந்தியக் குழு முதன் முறையாக ஹேட்லியை விசாரிக்கச் சென்ற போது அனுமதி மறுக்கப்பட்டதற்கு அரசியல் ஆய்வாளர்கள் முக்கியமான ஒரு கருத்தி யலைக் குறிப்பிடுகிறார்கள்.
அமெரிக்க உள்நாட்டு உளவுத்துறையான எ.இ.ஒ.யின் ஆலோசனைப்படி அவர்களது விருப்பப்படியே விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற தந்திர யுக்தியின் படியே முதல் அனுமதி மறுக்கப்டடிருக்கிறது. விரைவில் ஹேட்லி இந்திய புலனாய்வுக் குழுவினரால் விசாரணை என்ற நாடகம் அரங்கேற்றப் படலாம் முதல் இந்திய குழுவினருக்கு ஹேட்லியை விசாரிக்க அனுமதி மறுக்கப் பட்டதற்கு காரணம் விசாரணை என்ற பெயரில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு யூதனுக்கு (ஹேட்லிக்கு) இந்தியக் குழுவினரால் ஒரு தொந்தரவும் ஏற் படக்கூடாது என்பதற்காகவே ஒரு அமெரிக்கனுக்கு குறிப்பாக ஒரு யூதனுக்கு அந்நிய நாட்டினரால் அவமரி யாதை நடக்கக்கூடாது என அமெரிக்கா நினைக்கிறது. அது தான் அமெரிக்கா.
200 பேரை பறிகொடுத்த மும்பை பயங்கரவாதத் தாக்குதல் குறித்த விசார ணையில் ஒத்துழைப்பு கிடைக்காமல் அமெரிக்காவிருந்து ஏமாற்றத்துடன் திரும்பியது இந்தியா. ஒரு யூதன் மீது விசாரணை செய்தது 200 இந்தியர்களின் உயிரிழப்புகளை விட பெரியது என்று சொல்லாமல் சொன்னது அமெரிக்கா. மௌனத்தை கடைப்பிடித்தது இந்தியா. மவுனம் என்பது சம்மதத்துக்கு அறிகுறிதானே.