கூத்தாநல்லூர் நகர பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகம் திறப்பு விழா!

தேசிய அளவில் செயல்பட்டு கொண்டிருக்கும் மக்கள் பேரியக்கமான பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் புதிய நகர அலுவலகம் கூத்தாநல்லூர்-ல் 27-09-2013 அன்று சிறப்பாக திறக்கப்பட்டது.

புதிய அலுவலகம் முன்பாக பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் கொடியை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாநில செயற்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக் அவர்கள் ஏற்றினார். புதிய நகர அலுவலகத்தை அல்-சலாம் ஹஜ் சர்விஸ் நிர்வாக இயக்குனர் அப்துல் சலாம் அவர்கள் திறந்து வைத்து சிறப்பித்தார்.

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் திருவாரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் ராஜிக் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினர். SDPI கட்சியின் மாவட்ட பொருளாளர் அத்திக்கடை சுல்தான் அவர்கள் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக் அவர்கள் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் பணிகளையும், பாப்புலர் ப்ரண்ட் கடந்து வந்த பாதைகளையும் பற்றி சிறப்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக தஞ்சை மாவட்ட தலைவர் ஜர்ஜீஸ் அவர்கள் "அக்டோபர் 6 சிறை நிரப்பும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

கூத்தாநல்லூர் நகர அலுவலகம் திறப்பு விழாவிற்கு ஜமாஅத் செயலாளர் ஜமால் ஷேக், தக்பீர் ஹஜ் சர்விஸ் சிராஜ், அல்-அமான் ரபியுதீன், அல்-அமான் சலீம், ADA அப்துல் அலீம், முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் காதர் ஹுசைன் MC, மமக நகர செயலாளர் சீனி ஜெஹபர் சாதிக், NMA கமாலுதீன் MC , SM சமீர் MC , YBFC அஹ்மத் அலி, மரடோனா கால்பந்து கழக நிறுவனர் இஸ்மாயில், அன்சாருதீன் பாபு, திமுக நகர துணை செயலாளர் அமீருதீன், LB மைதீன், MRK சமீர், பகுருதீன், SDPI நகர தலைவர் அக்பர் அலி, SDPI நகர செயலாளர் OAK சாகுல், SDPI கட்சியின் நகர நிர்வாகிகளும், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் நகர நிர்வாகிகளும் மற்றும் 100-க்கும் மேற்ப்பட்ட ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

Related

விஸ்வரூபம் திரைப்படத்திற்கு எதிராக இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு

முஸ்லிம் தலைவர்களிடம் படத்தை திரையிட்டு காட்டிய பிறகே விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிட வேண்டும் என்று தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இத...

SP உதயகுமாருக்கு முகுந்தன் C மேனன் விருது - NCHRO

கடந்த ஆண்டிற்கான(2012) முகுந்தன் சி மேனன் விருது கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக நடக்கும் தீரமிக்க போராட்டத்திற்கு தலைமை வகிக்கும் டாக்டர் எஸ்.பி. உதயகுமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. 25 ஆயிரம்...

அப்துல் நாஸர் மஃதனி கறுப்புச் சட்டத்தின் பலிகடா!

கேரள மாநில பி.டி.பி கட்சியின் தலைவர் அப்துல் நாஸர் மஃதனி கறுப்புச் சட்டத்தின் பலிகடா என்று சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் கேரள மாநில தலைவர் நாஸருத்தீன் எழமரம் தெரிவித்துள்ளார்.கர்நாடக...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Hot NewsRecentArchive

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item