DIYF அறிக்கை நகைப்பிற்கிடமானது: பாப்புலர் ஃப்ரண்ட்!

பாப்புலர் ஃப்ரண்டை தடுப்போம் என DIYF (இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (மார்க்சிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பு)) வெளியிட்டுள்ள அறிக்கை நகைக்கத்தக்கது என்று கேரள மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பொதுச்செயலாளர் பி.அப்துல் ஹமீத் கூறியுள்ளார்.

இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:

‘கொலைவழக்கில் MLA-வும் DIYF-ன் மாநில செயலாளருமான(டி.ராஜேஷ்)  குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சூழலில் பாப்புலர் ஃப்ரண்ட் மீது பழி சுமத்தி DIYF நல்லவராக வேடம் போடுவது முரண்பாடாக உள்ளது.

அமைதியான சூழலை தகர்ப்பதே DIYF-ன் உணர்ச்சியை தூண்டும் அறிக்கை அமைந்துள்ளது. வட இந்தியாவில் வகுப்பு கலவரத்திற்கு RSS கடைப்பிடித்த அதே தந்திரங்களை கேரளத்தில் நடைமுறைப்படுத்திய வரலாறுதான் மார்க்சிஸ்டுகளுக்கு சொந்தமானது. இதனை மூடிமறைத்துக் கொண்டு நடத்தப்படும் பிரச்சாரங்கள் நகைப்பாக உள்ளது.

தலச்சேரியில் CPM கட்சியை விட்டு விலகி NDF-ல் சேர்ந்த காரணத்திற்காக முஹம்மது ஃபஸலை கொலைச் செய்துவிட்டு RSS-ன்  தலையில் சுமத்தியது CPM ஒஞ்சியம் பகுதியில் கட்சியை விட்டு விலகி புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியை துவக்கிய டி.பி.சந்திரசேகரனை கொலைச் செய்துவிட்டு அந்த குற்றத்தை முஸ்லிம் அமைப்பின் மீது போட முயன்றது.

சட்டத்தை மதிக்க தயாராகாத CPM-மும், DIYF-யும் நாட்டில் கலவரத்தை உருவாக்குகிறது. கட்சி தலைவர்களை கைது செய்யும் போலீஸ் அதிகாரிகளின் பெயரை குறிப்பிட்டு மிரட்டல் விடுக்கும் பிரணராய் விஜயனும், கோடியேரி பாலகிருஷ்ணனும் கேரளாவில் பாசிசத்தை நடைமுறைப்படுத்துகின்றனர்.

டி.பி.சந்திரசேகரன் கொலைவழக்கில் தேவையில்லாமல் பாப்புலர் ஃப்ரண்டை இழுத்து அறிக்கைகள் மூலமாகவும், செய்திகள் மூலமாகவும் பெயரை கெடுக்க முயன்ற CPM கட்சி தலைவர்களில் ஒருவரான எழமரம் கரீம் மற்றும் தேசாபிமானி பத்திரிகைக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை துவக்கியுள்ளோம்.’ இவ்வாறு பி.அப்துல் ஹமீத் அறிக்கையில் கூறியுள்ளார்.

Related

இயக்கங்கள் 2949007819091666590

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item