முர்ஸியின் கேபினட்டில் பெண்கள், கிறிஸ்தவருக்கு இடம்!

காப்டிக் கிறிஸ்தவ சமுதாயத்தின் அறிவுஜீவியான ஸமீர் மார்க்கோஸ், பேராசிரியை அல் ஸர்காவி, எழுத்தாளர் சுகைனா ஃபுவாத் ஆகியோர் முர்ஸியின் கேபினட்டில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசியல் சித்தாந்தத்தில் உயர் பட்டம் பெற்ற பேராசிரியர் ஸைஃப் அப்துல் ஃபதஹும் கேபினட்டில் இடம் பெற்றுள்ளார். கிறிஸ்தவர்களும், பெண்களும் தனது கேபினட்டில் இடம் பெறுவர் என்று ஏற்கனவே முர்ஸி அறிவித்திருந்தார்.
சிறுபான்மையினர், பெண்களை புறக்கணிக்கும் அரசுதான் ஆட்சியில் அமர்ந்துள்ளது என்று இஃவானுல் முஸ்லிமீனைச் சார்ந்த முஹம்மது முர்ஸி அதிபராக பொறுப்பேற்ற வேளையில் சிலர் விமர்சித்திருந்தனர். நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் விவாதித்த பிறகே கேபினட்டில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.