முத்துப்பேட்டையில் தொடரும் காவல்துறை அராஜகம்!!!
http://koothanallurmuslims.blogspot.com/2010/02/blog-post.html
S.D.P.I. கட்சியின் திருவாரூர் மாவட்ட துணைதலைவர் M.M. பாவா பக்ருதீன் (முத்துபேட்டை பேரூராட்சி 9வது வார்டு கவுன்சிலர்) அவருடைய வீட்டிற்குள் கதவை உடைத்து கொண்டு அத்துமீறி உள்ளே சென்று பொருட்களை சேத படுத்தி அவரது மகன் ரஹமத்துல்லாவை அடித்து இழுத்துக் கொண்டு காவல் நிலையம் சென்று உள்ளனர்.
மேலும் அவரது வீட்டில் உள்ள பணத்தையும், நகையையும் S.P. பிரவின் குமார் அபிநயு மற்றும் A.D.S.P. துரைராஜ் தலைமையில் இருபது காவலர்கள் திருடி சென்றுள்ளனர். (பணம் ரொக்கம் ரூ. 25,000 நகை 12 சவரன்) இதுபோல் தொடர்ச்சியாக முஸ்லிம்கள் பகுதியில் நடைபெற்று வருவதால் முஸ்லிம் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருவதாக S.D.P.I. மாவட்ட தலைவர் எஸ். அப்துல் அஜீஸ் குறியுள்ளார்.
கலவரத்தில் ஈடுபட்ட சங்பரிவார் அமைப்புகள் சேர்ந்தவர்களை கைது செய்யாமல் அப்பாவி முஸ்லிம்களை கைது செய்தும், நள்ளிரவில் பெண்கள் மட்டும் இருக்கும் முஸ்லிம் வீடுகளில் அத்துமீறி நுழைந்து பொருட்களை சேதப்படுத்தி ADSP துரைராஜ் தலைமையில் முத்துப்பேட்டை காவல்துறை ஆய்வாளர் சமரசம், சார்பு ஆய்வாளர் ஆனந்த தாண்டவம் மற்றும் 20க்கும் மேற்பட்ட சீருடை அணிந்த போலிஸார் அராஜகம் புரிந்துள்ளனர்.