அம்பத்தூர் நகராட்சி அலுவலகத்தை முஸ்லிம் இயக்கங்கள் முற்றுகை
http://koothanallurmuslims.blogspot.com/2010/01/blog-post_12.html
8-1-10 அன்று மதியம் 12 மணி அளவில் கொரட்டூரில் உள்ள நூர் பள்ளி வாசலை கமிஷனர் ஆஷிஷ் குமார் மூட முயன்றார். இதைக் கண்டித்து பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா, த.மு.மு.க., SDPI, மற்றும் சுன்னத்து வல் ஜமாத், ஐக்கிய பேரவை ஆகிய இயக்கங்கள் மற்றும் கட்சிகள் இணைந்து அம்பத்தூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுக்கை இட்டு போராட்டமும், தொழுகையையும் நடத்தினார்கள். தற்போது பள்ளியின் மீது வேறு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட மாட்டது என்று கமிஷனர் உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.